பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சித்தி மகள் லில்லியை கையில் ஏந்திக்கொள்கிறாள் லிஸி. தோழி மேரி அன்பளிப்பாய் கொடுத்த மைனா "லிஸி, லிஸி" என அழைக்கும்போது அதற்கு "லில்லி" என்றும் அழைக்க சொல்லிக்கொடுக்குமாறு மேரியிடம் சொல்கிறாள் லிஸி.
இரண்டு குழந்தைகள் வெறுமனே விளையாடும்போது அங்கு 'சமூக தாக்கம்' அவர்களுக்குள் எப்படி செயல்படுகிறது? 'சுயம்' எந்த அளவுக்கு அவர்களுக்கிடையே குறுக்கிடுகிறது?
குழந்தைமை முடிந்து ஒரு அமைப்பின் பிரதிநிதியாக அவர்கள் உருமாறுகிறபொழுது சுயம் எப்படி வேறுபாடு அடைகிறது? சமூக விதிசார் தாக்கங்கள் எவ்வகை விளைவுகளை அவர்களுக்குள் உண்டாக்குகிறது?
"லிஸி, லில்லி" "லிஸி, லில்லி" என்று மைனா கத்துகிறபொழுது சிரித்துக்கொண்டிருந்த லிஸியும், லில்லியும், ஒருவருக்கொருவர் பேச விருப்பம் இல்லாதவர்களாய் போய்விடக்கூடிய ஒரு காலமும் வந்து வாய்க்கிறது. அப்பொழுது மேரிக்கு லிஸி யாரென்றே தெரியாமல் போய்விடுகிறது. லிஸிக்கு மேரியை தன் கல்யாணத்துக்குக் கூட கூப்பிட கூடாதென்கிற வைராக்கியம் உண்டாகிறது.
( காலச்சுவடு பதிப்பக வெளியீடு)