ஜூன் 13, 2013

தபுசங்கர் ஆன தருணங்கள்

நீ சீவும்போது சிக்கிய முடிமீது காதல் கொண்டது சீப்பு.
*******************

பழகப் பழகப் பாலும் புளிக்குமாம் சுத்தப்பொய் இனிக்கிறதே நம் காதல்
********************

உலகமெங்கும் காதலர்கள் ஆர்ப்பாட்டமாம்
கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா?? தினம் தினம் உயரும் நம் காதலை.
*********************

நடனம் கற்றுக்கொண்டேதேயில்லை நான்
உன்னிடம் காதலை சொல்ல வரும்போது மட்டும்
என் உதடுகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் யாரோ

*************************

நேற்றுத்தான் உன் கண்களை இரண்டு நொடி பார்த்தேன்
இன்று எனக்கு விழிக்காய்ச்சல்.

***************************