செப்டம்பர் 06, 2015

Temple Runனும் நானும்

Android இயங்குதள அலைபேசிகளில் டெம்பில் ரன் என்ற விளையாட்டை ஆடி இருக்கிறீர்களா? ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் ...தடைகளைத் தாண்டி. வாழ்க்கையில் பிரச்சினைகளை தாண்டி ஓடுதல் போல. வேறு எதுவும் இல்லை.வெறும் ஓட்டம். ஆனால் சுவாரசியமாய் இருக்கிறது. ஓடுவதற்கு ஒரு வாய்ப்புதான். ஆட்டமிழந்து விட்டால் மீண்டும் முதலில் இருந்து. கவனியுங்கள். முடிந்த இடத்திலிருந்து அல்ல, துவக்கத்திலிருந்து. ஆனாலும் வெல்ல வேண்டும் என்ற வெறி ஆடத் தூண்டுகிறது. ஓடுதல், ஆட்டமிழத்தல், மீண்டும் ஓடுதல்,மீண்டும் ஆட்டமிழத்தல். நான் என்ற அகங்காரம்தான் இங்கே வெல்லத் தூண்டும் வெறி. என்னை ஒரு விளையாட்டு தோற்கடிப்பதா? நான் வெல்வேன். ஒரு விளையாட்டிலே 'நான்' கொல்லப்படுவதை நான் விரும்பாதபோது , உண்மை உறவுகளில், வாழ்வில் நானை அழிப்பது எவ்வளவு கடினம். சுயம் அழிதல் இன்பமாய் இருக்கலாம், நான் போதையாய் இருக்கிறது.