செப்டம்பர் 23, 2016

ஆணும் பெண்ணும்

காதலில் சுயம் அழிந்து போனாலும் காதல் நிராகரிப்பில் சுயம் மீண்டும் எழும். நம் அகங்காரம் தோல்வியை ஒப்புக் கொள்ளாது. நமக்கு தேவை அவனோ,அவளோ அல்ல. நம் அகங்காரத்தின் மீது விழுந்த அடிக்கு ஒரு பதில் தேவை. அது நம் அகங்காரத்தை கூட்டும் பதிலாய் இருக்க வேண்டும். நம்மை நிராகரிப்பதுகூட ஒரு அகங்காரம்தான். வாழ்வு முழுக்கவே ஆண்-பெண் அகங்கார மோதல்தான்.பணத்தால், வேலையால்,அழகால் அதை எழுப்பிக் கொள்கிறோமே தவிர அழியாத அகங்காரம்தான் உச்சாணிக் கொம்பில் ஆட்சி செய்கிறது. அது நம்மை வாழ வைக்கும் ஏனிந்த வாழ்க்கை என்ற வாதையோடு.அந்த அகங்காரம் முழுமையாக அழியும் தருணம் காதல் , காதலாய் இருக்காது.அது ஞானமாகும்.அதை உணர்பவனே ஞானியாவான்