செப்டம்பர் 23, 2016

பையன்கள் செய்வது சரியா?


ஊர்ல இருக்கற எல்லா பொண்ணுங்ககிட்டயும் romantic ஆ பேச வேண்டியது. அவன் கட்டிக்க போற பொண்ணு மட்டும் உத்தமியா இருக்கணும்னு நினைக்கிறது. சரக்கு அடிக்க வேண்டியது. ஏண்டானு கேட்டா மனசு சரி இல்லடானு சொல்ல வேண்டியது. அப்போ பொண்ணுகளுக்கும் மனசு சரி இல்லாம போகும் அவங்களும் அடிச்சா சரிதாண்டானு கேட்டா, அது சரிதான் மச்சி , அவளுக சரக்கு அடிச்சா எனக்கென்ன? என் பொண்டாட்டி அடிக்க கூடாதுடானு உளற வேண்டியது. ஊர்ல இருக்கற பொண்ணுங்க பின்னாடி போயி வம்பிழுக்க வேண்டியது, காதலிக்க வேண்டியது. அவன் தங்கச்சிய யாராவது காதலிச்சா பிரச்சனை பண்றது . டேய் நீ காதலிச்சவளும் ஒருத்தனுக்கு தங்கச்சியோ, அக்காவோ தாண்டா வெண்ண. இங்கே பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கொஞ்சம் குறைவான சுதந்திரமே. ஆணாதிக்கத்தால் அவர்கள் தினமும் ஒடுக்கப்பட்டுதான் இருக்கிறீர்கள். ஆனால் இதுக்கே இத்தனை பசங்க பைத்தியமாய் மாறி இருப்பதை பார்க்கிறபொழுது பெண்கள் முழுமையான சுதந்திரம் பெற்று விட்டால் ஆண் என்ற இனம் இருக்குமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. ஆண் பைத்தியங்கள்னு ஒரு இனம் இருக்கும். பொண்ணுங்களா நீங்க பண்றது மட்டும் சரியா?