செப்டம்பர் 23, 2016

செட்டில் ஆகணும்டா

வாழ்க்கையில செட்டில் ஆகணும்டா. இந்த வார்த்தையை ஒரு நடுத்தர அல்லது அதற்கும் குறைவான பொருளாதார நிலை உடைய ஒருவர் உங்களிடம் நிச்சயமாக சொல்லி இருப்பார்.நீங்களே யாரிடமாவது சொல்லி இருப்பீர்கள். இப்போதிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து சற்று மேம்படுதல்தான் செட்டில் என்று சொல்லப்படுகிறது.ஆனால் அந்த மேம்படுதலோடு உங்கள் வாழ்க்கையின் ஆசைகள் போய் விடுகிறதா? இன்னும் வேண்டும் வேண்டும் என்று என்றுமே தன் மன நிறைவு இல்லாத நிலைதானே அது. நான் செட்டிலாகி விட்டேன் என்று வேலையை விடுவீர்களா? கடைசிவரை முதலாளித்துவ அடிமையாய் இருக்கத்தான் போகிறீர்கள். இதுதான் செட்டில் ஆவதா? நாற்பது வயதுகளில் உங்கள் இழந்த இளமையை திரும்பிப் பார்க்கிற பொழுது செட்டில் ஆகிறேன் என்று நீங்கள் இழந்த காதல், நல்ல பயணங்கள்,நண்பர்கள், மகிழ்ச்சிகள் எல்லாம் உங்கள் முன் பல் இளிக்கும்போது என்ன செய்வீர்கள்? கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பார் நீ எல்லாம் நூறு வருஷம் வாழ்ந்து என்னடா கிழிக்கப் போற என்று , அது உங்களுக்கான கேள்விதானே நண்பர்களே. பண தன்னிறைவு அல்ல, மனத் தன்னிறைவே வாழ்க்கை என்ற வாழ்வியல் என்று நமக்கு புரியுமோ அன்று லைப்ல செட்டில் என்று உங்களிடத்தில் சொல்லப்பட்டிருக்கிற போலி வாழ்வியலை மறுத்து நகர எத்தனிப்பீர்கள்.அதுதான் இந்த ஒற்றைப் பெருவாழ்வில் நீங்கள் காணப்போகும் பெரிய வெற்றி.