செப்டம்பர் 23, 2016

ஏன் இப்படி ஆனோம்?

நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றின் விளைவுகள் என்னவென்றால் நாம் நாமாக இல்லாது போனது. எல்லாரிடமும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கிறது, whatsapp இருக்கிறது, facebook இருக்கிறது ஆனால் அதனோடு சேர்ந்து பெரும் தனிமையும் இருக்கிறது. feeling alone என்று ஒரு இளைஞன் facebookல் status போடும்பொழுது எனக்கு கவலையாய் இருக்கிறது. ஒரு குறைந்தபட்ச அன்பைக்கூட யாரிடமிருந்தும் பெறமுடியாத லட்சக்கணக்கான இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். ஒரு உறவுமுறையைத் துவங்குவதற்கான மதிப்பீடுகள் மாறியுள்ளதை ஒவ்வொரு இளைஞனும் துயரத்தோடு எதிர்கொள்வதென்பதே இந்த நூற்றாண்டின் சாபக்கேடு. இங்கே பேராசை அதிகமாகி உள்ளது, சுயநலம் அதிகமாகி உள்ளது, அன்பு குறைந்துவிட்டது. பிடித்த பெண்ணுக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு அவள் படிப்பாளா, பதில் அனுப்புவாளா என்று காத்திருந்த காதலும் அன்பும் இன்றில்லை. சமகால இளைஞன் காதலுக்கான உணர்வு நிலைகளையே இழந்துவிட்டான். முத்தத்தை whatsapp smileyல் அனுப்பி மனநிறைவு தேடும் பாலியல் வறட்சிதான் இங்கிருக்கிறது. ஆண்- பெண் உறவுநிலை மிக மோசமான கட்டத்தில் இருக்கிறது. பெரும்  மனஉளைச்சல் கொண்ட கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. மனித இனத்தின் முதன்மை நோக்கமே இனப்பெருக்கம் செய்து அடுத்த தலைமுறை மனித இனத்தை உருவாக்குவதுதான் என்பதை உணர்ந்துகொண்டு உறவுமுறைபேணல்சார் கல்வியைக் கொடுப்பதை நாம் உறுதிபடுத்தாவிட்டால் இங்கே வரும் காலங்களில் பெருகும் விவாகரத்துகளை யாராலும் தடுக்க முடியாது.