செப்டம்பர் 23, 2016

சஸ்பென்சோட சாவு

மரணத்தைப் பற்றிய பயம் என்பது நாம் எப்படி சாகப்போகிறோம் என்பதைக் குறித்தல்ல. சாவிற்குப் பிறகு நாம் என்னவாகப் போகிறோம் என்பது பற்றித்தான். சார்புத் தன்மையை இழந்துவிட்டு முழுவதும் தனித்துச் செயல்படும் நிலை சாவில்தான் வருகிறது. ஒன்றாக சேர்ந்து சாகும்போதுகூட அவ்வளவு பயம் வர வாய்ப்பில்லை, தனித்து விடப்படல் நிகழும்போது பயம் அதிகமாகி விடுகிறது. செத்தவர்கள் எல்லாம் இந்த அண்டத்தின் ஓரிடத்தில் நம்மைப்போலவே இருந்துகொண்டிருந்தால், அங்கேயும் நமக்கு நண்பர்கள் கிடைத்தால், காதலி கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தால் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் மரணத்திற்கு காத்திருப்பதைவிட , திடீரென அது நிகழ்ந்துவிட்டால் நல்லதென்று படுகிறது. எனக்கு அவ்வப்போது கலைஞர் கருணாநிதி இப்போது என்ன மனநிலையில் இருப்பார் என்பதுதான் வந்துபோகிறது. நாட்களை எண்ணிக்கொண்டிருப்பது எவ்வளவு துயரம்? துப்பாக்கி படத்தில் விஜய், வில்லனைக் கொல்வதற்கு முன் சஸ்பென்சோட சாவு என்பார். ஆனால் எல்லோருமே அடுத்து என்ன என்று தெரியாத சஸ்பென்ஸோடுதான் சாகிறார்கள்.