செப்டம்பர் 23, 2016

அம்மா உணவகத்தில் சாப்பிடுவது எப்படி?


(A guide for dummies by Akhil Kumar)
உலகநாடுகளெல்லாம் செயல்படுத்த துடிக்கும் அதி உன்னத திட்டம் அம்மா உணவகம் என்பது நம்மில் எல்லாரும் அறிந்ததே. காலையில் இட்லியும், வெண் பொங்கலும் கிடைக்கும். வெந்தும் வேகாத இட்லிக்கு சுடு தண்ணீரில் கலந்த மஞ்சள்தூள் கொடுப்பார்கள். அதுக்கு பெயர் சாம்பார். ஆனால் வெண்பொங்கல் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கும். நல்ல இட்லி,சாம்பார் சாப்பிட ஆசையாக இருந்தால் அம்மா பிறந்தநாள், தீபாவளி போன்ற சுப தினங்களில் போனால் கிடைக்கும்.மதியம் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் போடுவார்கள். அதை அப்படியே சாப்பிடலாம் என்று போனால் உள்ளுக்குள்ள இறங்காது. தாத்தாவோ , பாட்டியோ பக்கத்தில் வடை போடுவார்கள். அதை வாங்கிக்கொள்ள வேண்டும். சாப்பாடு அஞ்சு ரூபா அதுக்கு side dishம் அஞ்சு ரூபா. அம்மா உணவகம் பக்கத்துல வடை கடை போடறது சூப்பர் பிசினஸ். வடை சுட தெரிந்தவர்கள் முயற்சிக்கலாம். இரவு சப்பாத்தி அதுக்கு பருப்பு குழம்பு. இரவு சாப்பிட கொஞ்சம் உடல் பலம் தேவை. ஏனா சப்பாத்தி கொஞ்சம் strong. தொண்டைக்குழியில இறங்காது. தண்ணீர் குடித்து கீழே இறக்கவும். அது அப்படியே வயித்துல போயி உட்கார்ந்துக்கும். நடு இரவில் ஒரு உருண்டை மாதிரி வயிற்றில் form ஆகும். வைரமுத்து சொல்லிருப்பாரே காதலித்துப்பார், வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை உருளக் காண்பாய் . அம்மா உணவக சப்பாத்தியை காதலித்தால் இதை அடையலாம். அப்பறம் இந்த சப்பாத்தியால் காலையில் நேரம் மிச்சமாகும் . பாத்ரூமில் உட்கார்ந்து என்ன முக்கினாலும் ஒண்ணும் வெளிய வராது. 
( the methods above are performed by the professional poor who follows தவ வாழ்க்கை. others don't try this)