அக்டோபர் 25, 2016

புரட்சி அன்டோல்ட் ஸ்டோரி

" டோனி அன்டோல்ட் ஸ்டோரி பாத்திட்டியா?"

" இன்னும் பாக்கல"

" இன்னும் பாக்கலயா? ஒரு ரியல் லைப் ஹீரோவோட ஸ்டோரி அதயே பாக்கலயா? "

" டோனி எப்படி ரியல் லைப் ஹீரோ ஆனாரு? "

" கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்து முன்னேறிருக்கறாரே"

" உனக்கு சுப. உதயகுமாரன் தெரியுமா? "

" தெரியாது. யாரு?"

" சீமான்? "

" கேள்விப்பட்ருக்கேன். ஏதோ தமிழ்னு ஒரு கட்சி வச்சிருப்பாரே அவருதான?"

" கூடங்குளம் அணுஉலைக்கு எதிரா போராடினாரே அவருதான் உதயகுமார்"

" ஓ அவரா"

" அவரு போன தடவை எலெக்ஷன்ல நின்னாரு. யாரும் ஓட்டுப்போடாம தோத்துப் போய்ட்டாரு. அவரெல்லாம் ஹீரோ கிடையாதா?"

"அவரு யார்கிட்டயோ காசு வாங்கிட்டு இதெல்லாம் பண்றாரு"

"அப்படியா? எங்கப் படிச்ச, எப்படித் தெரிஞ்சுகிட்ட"

" படிக்கல. அப்படித்தான் சொல்றாங்க"

"யாரு சொல்றா"

" அது வந்து... மறந்துருச்சு... சரி அத விடு.. அவரு வந்து போராடக்கூப்டா நீ போயிருவியா?"

" அது சூழ்நிலையைப் பொறுத்தது"

" என்ன சூழ்நிலை? நீயும் போகமாட்ட. நானும் போகமாட்டேன். அப்பறம் என்னத்துக்கு இப்போ புரட்சிப் போராளி மாதிரி சீன் போட்ற"

" புரட்சினா ரோட்டுக்குப் போயி போராட்றது மட்டும் கிடையாது. அது ஒரு மனமாற்றம். அஞ்சு வர்ஷத்துக்கு ஒரு டைம் வோட்டு போட்றீயே அப்ப ஒரு மனமாற்றம் வந்தாக்கூடா அதுதான் புரட்சி. அப்போ எனக்காகப் போராடறவன் எவன்னே தெரியாம எவனுக்கோ ஓட்டுப்போட்டுட்டு வந்து, ஒண்ணும் நடக்கலியேனு பொலம்பறியே அது ஏன்? அரசியல்வாதிக்கெல்லாம் ஒரு டெஸ்டும் தேவையில்ல. எலெக்ஷன்ல நிக்கறவன் யாருனு தெரியுமானு வோட்டு போட்றவனுக்குத்தான் டெஸ்ட் வைக்கணும். சுப. உதயகுமாரன்மேல விமர்சனம் இருக்குன்னுகூட எப்படித் தெரிஞ்சுகிட்ட? நீயா படிச்சியா? எவனோ டீக்கடைல சொன்னதக்கேட்டு பேசிட்டு இருக்க. அப்போ ஒரு போராளியப்பத்தி தெரிஞ்சிக்க சின்ன முயற்சிகூட எடுக்காத நீயெல்லாம் எப்படி அரசாங்கத்த விமர்சிக்கலாம்? நமக்காக போராடறவன் ஜெயிக்கறான் பாத்தியா அதுதான் புரட்சி. மத்தபடி எல்லாரும் ரோட்ல போயி ஒக்காந்துக்க முடியாது. டோனி வீட்ல அவனுக்கு சுவிம்மிங் பூலே தனியா இருக்கு. உனக்கு குளிக்க தண்ணி இருக்கா? டோனி BCCI கம்பெனிக்காக வேல செய்யறான்.நீயும்தான் ஒரு கம்பெனில வேல செய்யற.அப்போ நீயும் அவனும் ஒண்ணுதான? நீயும்தான் உன் கம்பெனில கஷ்டப்படுற. உன்ன வச்சு ஏன் படம் எடுக்கல? நீ ஹீரோ இல்லியா? BCCI கோடிக்கணக்குல சம்பாதிக்குது. உன் கம்பெனிக்காரனும் கோடில சம்பாதிக்கறான். டோனிக்கும் கோடிக்கணக்குல சம்பளம். உனக்கு சம்பளம் பத்தாயிரம் தாண்டுதா? அத ஏன்னு யோசி. டோனியோட படம் பாக்கறது கண்டிப்பா தப்பு இல்ல. ஆனா டோனி படம் மாதிரி விஷயங்கள மட்டுமே பாக்கறது தப்பில்லையா?"

" விட்டு விட்டுக் கேட்குது. நான் அப்பறம் பேசறேன்"