ஏப்ரல் 30, 2017

எக்ஸிபிஷனிசம்

இதோ என் காதலி
எவ்வளவு அழகி அவள்
பார்த்து வயிறு எரியுங்களடா

இதோ எனது வீடு
மினுங்கும் அழகில்
முகம் பார்த்துக் கொள்ளுங்களடா

இதோ எனது வேலை, இதோ எனது சம்பளம், இதோ எனது கார், இதோ எனது குழந்தைகள், இதோ அவர்கள் முதல் மார்க் வாங்கிய தேர்ச்சி அட்டை

LHS = RHS. வேற என்ன மயிரை இனி நிரூபிக்க வேண்டும்?

இனியாவது உங்களிடமிருக்கும் என் வாழ்க்கையைக் ஒரே ஒருமுறை கடனாகக் கொடுங்களடா

வளர்ந்தேயிராத அந்த பெரிய குழந்தையை ஒருமுறை பார்த்துக்கொள்கிறேன்

பயமாய் இருக்கிறது. என்னால் முடியாது. இந்தா பிடியுங்கள். நீங்களே இதை வளர்த்திக்கொடுங்களடா.

மீண்டும் எக்ஸிபிஷனிஸ்ட் ஆகிறேன்.

வழக்கம்போல் நீங்களும் எக்ஸிபிஷனிஸ்ட் ஆகுங்கள்

யாருக்குப் பெருசு என்று பார்த்து பெருமிதம் கொள்வோமடா.